தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணையில் நீர் மின்நிலையம் உள்ளது. இங்குள்ள 6 அலகுகளில் தலா 150 மெகாவாட் வீதம் மொத்தம் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், மின்நிலையத்தின் ஒரு பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று யூனிட் 4 இல் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக பேனல் போர்டுகள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது 30 பேர் வேலை செய்து வந்துள்ளனர். விபத்து ஏற்பட்டதும் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]