எந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது எஸ் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தோ, ஏற்க மறுத்தோ தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அரியலூர் மாவட்டத்தில் எண்ணெய் வளத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி […]
தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காட்டுப் பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து காட்டுப்பன்றிகள் விளைநிலத்திற்குள் நுழைவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து விவாதத்தில் சுற்றுச்சூழல் குறித்து திமுக எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், […]
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் (நாளை) தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தஞ்சையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 28-ம் (நாளை) தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் […]
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருவாரூரில் சாலை பாதுகாப்புவார விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு, மக்கள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்தபடக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறினார் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் பொதுமக்களும், […]