எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாதில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி போன்ற ஆயுதம் வைத்து தெருவில் பாட்டுக்கு நடனம். ஹைதராபாதில் 9 இளைஞர்கள் தெருவில் இரங்கி கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி அவர்களில் இருவரின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கொண்டாட்டம் ஜூன் 9 அன்று இரவு நகரில் மல்லேபள்ளி அருகே அப்சல்சாகரின் பைலன்களில் நடந்துள்ளது. மேலும் இளைஞர்கள் நள்ளிரவில் அக்கம் பக்கத்திலுள்ள தெருக்களில் வந்து, வாள்களையும் கத்திகளையும் […]
ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிங்கங்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை செய்ததில் தொற்றானது வெளியிலிருந்து பரவியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது. விலங்குகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகிறது. […]