2019 உலககோப்பைக்கு முன்பு இந்தியா அணியிலும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் நல்ல ஃபார்ம்மில் இருந்த அம்பதி ராயுடு உலகக்கோப்பை அணி அறிவிப்பில் அவர் பெயர் இடம் பெறும் என ரசிகர்களும் , சில கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் இந்திய அணியில் இடம்பெறவிலை .அவருக்கு பதிலாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்தார். அதனால் அம்பதி ராயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் 3டி கண்ணாடி டிவிட் போட்டிருந்தார். Just […]
ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதீன் சங்க தலைவர் பதவிக்கு கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் முகமது அசாரூதீன் 147 ஓட்டுகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தார். இதன்பின் முகமது அசாரூதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு.இவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது .ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் […]