இன்று (புதன்கிழமை) ஜெர்மனி, முனிச் நகர் விமான நிலையத்தில் இருந்து லுஃப்தான்சா விமான எண் LH772 எனும் விமானம் பாங்காங்க் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜெர்மனியை சேர்ந்த கணவனும், தாய்லாந்தை சேர்ந்த அவரது மனைவியும் பயணித்துள்ளனர். விமானம் பறந்து கொண்டிருக்கும் சமயம், கணவன் மனைவி இடையே பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. உடனே தாய்லாந்தை சேர்ந்த அந்த பெண் விமானியிடம் இதனை கூறியுள்ளார். தன் கணவரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் […]