சூறாவளியால் 1மில்லியன் டாலர் மதிப்புள்ள மெக்லாரன் கார் அடித்து செல்லப்பட்ட பரிதாபம். புளோரிடாவில் நேற்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய சூறாவளியால் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள, ஸ்போர்ட்ஸ் மெக்லாரன் கார் கேரேஜிலிருந்து அடித்து செல்லப்பட்டு, நீரில் மூழ்கியது. 217mph வேகத்தில் செல்லக்கூடிய இந்த மெக்லாரன் பி1 காரானது 2.2வினாடிகளில் கிட்டதட்ட 0 முதல் 60mph வரை செல்லக்கூடியது. இந்த காரின் உரிமையாளர் அதனை ஒரு வாரத்திற்கு முன்பு தான் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த […]
புளோரிடாவை தாக்கிய மிக ஆபத்தான சூறாவளி, மக்களை பீதியடைய செய்துள்ளது. தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்.. வைரலான வீடியோ! இன்று(செப் 29) 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு புளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது, அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த வீடுகளையும் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும் இந்த பயங்கரமான சூறாவளியால் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கவிழ்த்தப்பட்டன மற்றும் சாலையோர மரங்களும் வேரோடு சாய்ந்து […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும்,நாளை நீலகிரி,கோயம்புத்தார்,தேனி,திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி,திருநெல்வேலி,ஈரோடு,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி,கோயம்புத்தூார்,தேனி, திண்டுக்கல்,திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,ஈரோடு,நாமக்கல்,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதைப்போல நாளை நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை […]
வெப்பச்சலனம் காரணமாக,தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக,வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் நாஸ்வில்லி (Nashville) உள்ளிட்ட இடங்களை நேற்று அடுத்தடுத்து பயங்கர சூறாவளி காற்று வீசியுள்ளது. அப்போது சுழன்றடித்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள், கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்தன. மேலும் நூற்றுகணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர சூறாவளி காற்றால் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.