சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும், அவருடைய மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக அறிவித்தது தான். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ட்ரெண்டிங்கில் இருப்பதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த யாருக்கும் தெரியாத விஷயங்கள் பற்றிய தகவலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது ‘பாம்பே’ படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய ஹிட்டாகி இருந்த “ஹம்மா ஹம்மா” பாடலை ஒரு இசை கலைஞர் ரீமிக்ஸ் செய்தபோது […]