மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு. நெதர்லாந்தில் இருக்கும் Vrije Universiteit Amsterdam-ல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது சர்வதேச அளவில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களை Microplastics என்று அழைப்பார்கள். இந்த துகள் தான் மனித ரத்தத்தில் செல்களோடு, செல்களாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். […]