சீனா ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணி நாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து முதன்முறையாக விலங்குகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இந்த நாய்க்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து அந்த நாயை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் நாய்க்கு கொரோனா பதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நாயை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கொரோனா பாதிப்பு நீங்கிய பின்னர் நாய் உரிமையாளரிடம் கொடுக்க மருத்துவர் முடிவு செய்துள்ளனர்.