‘G’ அல்லது ‘அ’ எழுத்து போட்ட வாகனங்களை சோதிக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகளில் உள்ள போலீஸாருக்கு ஒரு அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.அதாவது,’G’ அல்லது ‘அ’ எழுத்து மற்றும் ‘Human Rights’ என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்பதுதான். ஏனெனில்,ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல ‘G’ அல்லது ‘அ’ எழுத்து கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.மேலும்,சிலர் Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer […]
ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம் குமார் குறித்த வழக்கிற்காக மாநில மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகியுள்ளனர். சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக அவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தினை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராம்குமார் என்பவரை போலீசார் […]
குடியுரிமை திருத்த சட்டம் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்குகளுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சேர்த்து இடையீட்டு மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவில், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான விவரங்களில் மட்டும் […]
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நிகழ் காரணம் பெண்களுக்கு சரியான கல்வியறிவு அளிக்கப்படாதாதே ஆகும்; பல கற்றறிந்த பெண்கள் கூட தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றி அறியாமல் இருக்கின்றனர். இது போல் பெண்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளை பற்றி அறிந்து கொள்ளாத வரையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களும் கூட தடுத்து நிறுத்தப்பட சாத்தியமே இல்லை. இந்த பதிப்பில் இந்திய பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்கள் பற்றி படித்து […]
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக திகழ்வது போல், ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான சட்ட திட்டங்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவில் தற்சமயம் பெண்களுக்கான அநியாயங்கள் அதிகரித்து வருகின்றன; இதற்கு நாம் அரசையும், தகாத செயல்களில் ஈடுபடும் ஆண்களையும் குற்றம் சொன்னாலும், இந்த அநியாயங்கள் நிகழ நம்மிடையே நிகழும் அறியாமையும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். இந்த பதிப்பில் ஒவ்வொரு இந்திய பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றி படித்து […]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாயாளர் இளவரசர் செய்த் ராத் அல் ஹூசைன், கடந்த ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாயாளர், இளவரசர் செய்த் ராத் அல் ஹூசைன் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமைகளுக்காக அனைவரும் எழுந்து நிற்க உகந்த தருணம் இதுவாகும்.மேலும், மனிதத்தைக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மனித உரிமைகளைப் […]
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு அரசாணையின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நான்கு பேர் நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் தில்லி உயர்நீதிமன்றத்தில் […]