எச்.ராஜா போன்றவர்கள் கட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது – சந்திரன்!

எச்.ராஜா போன்றவர்கள் கட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர பாஜக தலைவர் சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். தேர்தல் செலவிற்காக கொடுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ததாக பாஜகவின் மூத்த நிர்வாகி எச்.ராஜா அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த காரைக்குடி தொகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மூவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜகவின் காரைக்குடி நகர தலைவர் சந்திரன் அவர்கள் மாவட்ட தலைமைக்கு கடந்த 21-ஆம் … Read more

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல்…!

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும்,  நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். எச்.ராஜாவின் இந்த பேச்சு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த … Read more

4 கோடி பணம் கையாடல் : எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்- எல்.முருகன்!

தேர்தல் செலவின பணம் பதுக்கியதாக எச்.ராஜா மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். தனது தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜக நிர்வாகிகள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜ குற்றம் சாட்டிஇருந்தார். இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் எச்.ராஜாவின் குற்றசாட்டை நிராகரித்ததுடன் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், இவர் சட்டசபை தேர்தல் செலவுக்கு … Read more

காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வி அடைந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக 158, அதிமுக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 75,511 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்… தோல்வி பயம் வந்துவிட்டது – எச். ராஜா, பாஜக

தோல்வி பயத்தால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்ச்சிப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர் என எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பகுத்தறிவுவாதி நாங்கெல்லாம் பெரியாரிஸ்ட் என்று சொல்லக்கூடிய கூட்டம் எதைக் கண்டாலும் பயப்படுகிறார்கள். ஏற்கனவே, இந்த வாக்கு இயந்திரம் ஒன்றுக்கு ஒன்று எந்த தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா? எதுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. … Read more

காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் – ஹெச்.ராஜா, பாஜக

பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலை தினசரி அதிகரித்து வருகிறது. வாரிசுமையால் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசுதான் காரணம் எனவும் எதிர்க்கட்சி குற்றசாட்டி வருகின்றனர். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக … Read more

நீங்கெல்லாம் ஏன் கவலைப்படுறீங்க., ரஜினியை போல் தான் சசிகலாவும் – எச் ராஜா பேட்டி

அரசியலில் ரஜினியை போல் தான் சசிகலாவும் என்று எச் ராஜா செய்தியாளர்கள் பேட்டியின் போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, அரசியல் ரீதியாக நான் இந்த நிலைப்பாட்டை எடுக்கவுள்ளேன் என்று சசிகலா அவர்களே சொல்லாத போது, அவர் வாய் திறந்து இதுவரை பேசாத போதும், நீங்கெல்லாம் ஏன் ரொம்ப கவலைப்படுறீங்க என்று கூறியுள்ளார். இப்படித்தான் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் என்று அனைவரும் கூறிக் கொண்டே இருந்திங்க, கடைசில் அவர் என்ன சொன்னார். நான் அரசியலுக்கு வரவில்லை என்று … Read more

முதல்வர் வேட்பாளர் விவகாரம் ! எதுவாக இருந்தாலும் தலைமை தான் அறிவிக்கும் – ஹெச்.ராஜா விளக்கம்

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ,முருகனும் அறிவிக்க முடியாது ,நானும் அறிவிக்க முடியாது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய … Read more

வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது – அண்ணாமலை

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 2021 சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, தமிழக அமைச்சராக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கான தொடக்க விழாவில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிதான் விவசாயிகளை கூன் போட்டு நிற்க வைத்தது என குற்றம்சாட்டி உள்ளார். மேலும், மத்திய அரசுடம் மேற்கு வங்க … Read more

நீதிமன்றத்தில் வீர வசனத்தை பேச சொல்லுங்கள் -ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் சண்முகம் பதிலடி

ஹெச்.ராஜா பேசும் வசனங்களை நீதிமன்றத்தில் பேச சொல்லுங்கள் என சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை,நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடைபெறவுள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்க்கு தமிழக அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால்,தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.இந்த யாத்திரை டிசம்பர் 6-ஆம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் … Read more