கோவை : நேற்று கோவையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்ற வணிகர்கள் என பலர் கலந்து கொண்ட தொழில்துறை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் , ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் ஜி.எஸ்.டி வரி பற்றி கலகலப்பாக கோரிக்கை வைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த […]
ஓட்டல்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு தள்ளுபடி. அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடகோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிசிடிவி பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் நடராஜன் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்தியது. இதில் 12 சதவீதத்திற்கு மேலான உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படவில்லை […]
உணவகங்கள் தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு. நாடு முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தானாக சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தங்கும் விடுதிகள்,உணவகங்கள் சேவைக் கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, எந்தவொரு தங்கும் விடுதியும் அல்லது உணவகங்களும் தானாக வாடிக்கையாளரின் பில்லில் சேவைக் கட்டணத்தை சேர்க்க கூடாது. வேறு எந்தப் பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் […]
கல்யாண மண்டபம், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளை இயக்குவதற்கான சான்றை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள், நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் ஓட்டல்கள், விருந்து அரங்கங்கள் உள்ளிட்டவைகள் நிறுவ மற்றும் செயல்பட இனிமுதல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றை பெற வேண்டுமென தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி நெடுஞ்சாலை உணவகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகள் […]
தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், ஓட்டல் சங்கம் சார்பில் அறிவிப்பு ஓன்று வெளியாகி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் ஓட்டல்களில் பார்சல் வழங்கப்பட்டு வந்தது. மற்ற மாவட்டங்களில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை ஓட்டல்களில் பார்சல்களை மட்டுமே வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஜூன் 30-ம் […]
சமூக இடைவெளியை கடைபிடிக்க உணவகங்களில் அறிமுகமாகும் புதிய முறைகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலாய் கட்டுப்படுத்த பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில், 265,928 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் ருந்த நிலையை, தற்போது சில தளர்வுகளுடன் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மேசையின் நடுவே […]
ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0 கீழ் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நடைமுறை ( SOPs) ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0 இல் 3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு […]
ஜப்பானில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள ஓட்டல்கள். முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகள் தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் நோயினால் இதுவரை உலக அளவில், 3,308,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 234,108பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், குறைந்த அளவு கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளிப்பதற்காக 2 ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள டீக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி டீக்கடைகளில் பயன்படுத்தும் டம்ளர்கள் சுத்தமாகவும், வெந்நீர் மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்திருக்க வேண்டும் என்றும் கடையில் இருப்பவர்கள் சுத்தமாக கைகளை கழுவி விட்டு டி போடவேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுபோன்று உணவகங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றும் […]