ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததகாவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓசூர் அருகே நாகமங்கலத்தில் பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள […]
60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் அமைகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிரமாண்டமான தொழிற்சாலையை ஓசூரில் அமைக்கிறது டாடா குழுமம். ஓசூரில் அமையவுள்ள மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே […]
ஓசூரில் அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியாகி நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் இன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. அப்போது அருகில் […]
ஓசூரில் ராஜீவ் எனும் இளைஞர் டிவிஎஸ் கம்பெனி உயர் ரக பைக்கை 2.8 லட்சம் மதிப்பிற்கு 10 ரூபாய் நாணயங்களாக மொத்தமாக கொடுத்து வாங்கியுள்ளார். இந்திய அரசு தான் அனைத்து நாணயம் மற்றும் ரூபாய் தாள்களை அச்சிட்டு, தயாரித்து புழக்கத்தில் விடுகிறது. இருந்தும் மக்கள் மத்தியில், 10 ரூபாய் நாணயங்கள் மீதான சிறிய அலர்ஜி இருந்து கொண்டு தான் இருக்கிறது. சில கடைக்காரர்கள் கூட 10 ரூபாய் நாணயம் என்றால் வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கின்றனர். இதனை […]
நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் மேரி பிரின்சி 28 வாக்குகளும், போட்டி வேட்பாளர் ராமகிருஷ்ணன் 24 வாக்குகளும் பெற்றனர். இதில் 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், […]
முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் கொள்ளை வழக்கில் கைதான 9 பேரும் நாளை ஓசூர் அழைத்துவரப்படுகின்றனர். ஐதராபாத் சமசத்புர் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. ஓசூரில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் ஜனவரி 22-ஆம் தேதி ரூ.12 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து 25 கிலோ தங்கம் நகை, பணம், துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் ரூ.கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளை அடித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று கொள்ளையடித்துள்ளனர். அந்நிறுவன அலுவலகத்தில் இருந்த 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாகலூர் சாலையில் உள்ள […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வாலிபர் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்த வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் ஏடிஜிபி ரவிக்குமார் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி சைபர்கிரைம் எஸ்ஐ நவாஸ் தேசிய மையம் அனுப்பி இருந்த ஆவணங்களை வைத்த அந்த வாலிபரின் ஐபியை வைத்து முகவரியை ஆய்வு செய்தனர். அந்த வாலிபர் தர்மபுரி அடுத்து உள்ள வெண்ணாம் பட்டியை சேர்ந்த சீனு(26). இவர் மெக்கானிக்கல் […]
புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஏத்தெர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலீட்டார்கள் மாநாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்த நிலையில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டது ஏத்தெர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம்.இந்த நிறுவனம் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனது முதல் ஏத்தெர் எனெர்ஜி 450 (ather energy 450) என்ற மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகின்றது. […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் மாண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள காவிரியாற்றில் ஒசூரை சேர்ந்த காதல் திருமணம் செய்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. சூடுகொண்டப்பள்ளியில் வேறு வேறு சமூகத்தை சேர்ந்த நந்திஷ்-சுவாதி காதல் திருமணம் செய்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். காதலர்களை கொன்று விட்டு கை,கால்களை கட்டி காவிரியில் வீசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சூடுகொண்டபள்ளியை சேர்ந்த நந்திஷ், அதே பகுதியை சேர்ந்த சுவாதி ஆகியோர் காதலித்து திருமணம் செய்தனர். […]
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு தீடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.அதுபோல் ஊத்தங்கரை மற்றும் […]
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்த ஊர் இளைஞருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 45 வயது ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அதேபகுதியில் உள்ள ஒரு தக்காளி மண்டியில் பணிபுரியும் இளைஞர் ஒருவருடன், அந்த அரசு பள்ளி ஆசிரியை நெருக்கமாக உள்ள வீடியோ படம் ஒன்று சமீபத்தில் யூடியூப்பில் […]
வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை காட்டியதால், வனவிலங்குகள் காட்டுபகுதியை விட்டு ஊருக்குள் வருவது சகஜமாகிவிட்டது. அதேபோல் சமீபத்தில், ஓசூர் சானமாவு வனபகுதியில் கட்டு யானைகள் முகமிட்டுள்ளதால் வணபகுதிய ஒட்டிய கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இடங்கள் என்னவென்றால், சானமாவு, பீர்ஜேபள்ளி, ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. source : dinasuvadu.com