சென்னை:தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 விடுதிகளுக்கு பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் படி, ஆண்டு தோறும் மாவட்ட அளவில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் சிறந்த மூன்று விடுதிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக […]
சென்னை:தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரூ.23.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தலைமைச்செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 23 கோடியே 78 லட்சத்து […]
விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைகழகம் சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் அதிகமாக சென்னையில் தான் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் , கொரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியது.இந்நிலையில் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைகழகம் கடிதம் எழுதியுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாக […]