அனுமதி பெறாமல் விடுதி நடத்தியது தண்டனைக்குரிய குற்றம் என்று மாநில குழந்தைகள் நல ஆணையர் பேட்டி. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி அனுமதியின்றி இயங்கியுள்ளது என்று மாநில குழந்தைகள் ஆணையர் நல சரஸ்வதி தெரிவித்துள்ளார். கடந்த 13ம் தேதி மாணவி இறந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாநில குழந்தைகள் நல ஆணையர் இன்று விசாரணை மேற்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, […]
Telangana : தெலுங்கானா மாநிலத்திலுள்ள மண்சேரியல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் மே மாத விடுமுறைக்கு முன்னதாக பிரியாவிடை நடத்த வேண்டும் என விடுதி வார்டனிடம் அனுமதி கோரியுள்ளனர். அந்தப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெளியிலிருந்து வரக்கூடிய மாணவர்களிடம் சொல்லி மது வாங்கி பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த விருந்தின் போது மாணவர்கள் […]
கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான கல்வி மானியக் கோரிக்கை உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. […]
விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம்,நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் என்றும்,எனவே, தொழிற்சாலை விடுதிகளில் தரமான உணவு,அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை […]
சீனாவில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவில் ஜியாங்சுவில் இருக்கும் சுஹாவ் நகரில் உள்ள விடுதி இடிந்து விழுந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் விடுதியில் இருந்தவர்கள் 23 பேர் அந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் இந்த இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் பலத்த காயத்தால் மருத்துவமனையில் […]
ஹாஸ்டல் படத்தின் கதையை நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ஹாஸ்டல். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துளளார். மேலும் நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘அடி கப்பியரே கூட்டமணி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த நிலையில் […]
மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரில் இயங்கிவரும் பெண்கள் விடுதிகளை, முறையாக பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அவகாசம் […]
மதுரை திருமங்கலம் உள்ள மூன்று அரசு பெண்கள் விடுதியில் ஆய்வு செய்தில் கள்ளர் விடுதியும் பிற்படுத்தப்பட்டேர் நல விடுதியிலும் சுகாதாரம் மிக மோசமாதாகவும், மாணவிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கட்டிடங்களும் உள்ளன. மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பும் விடுதியை சுகாதாரமாக வைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) மதுரை மாநகர் சார்பாக மனு கொடுக்கப்பட்டது…