தொடரும் ஆணவக் கொலை.. காதல் திருமணம் செய்த அக்காவை கொலை செய்த தம்பி!
கர்நாடகா மாநிலம், கரடகியில் வசித்து வந்த வினோத் – திரிவேணி காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களை திரிவேணியின் தம்பி உட்பட சிலர், கொலை செய்தனர். கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத். இவர் கொப்பல் மாவட்டத்தில் கரடகி எனும் இடத்தில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், பாகல்கோட்டையை சேர்ந்த திரிவேணி எனும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் நாளடைவில் இரும்பு போல வலுவாக இருந்தது. […]