ஹாங்காங்-ஏர் இந்தியா விமானங்கள் நான்காவது முறையாக நிறுத்தம்.!

இந்த வார தொடக்கத்தில் ஒரு சில பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்ததை அடுத்து தற்போது, மும்பையில் இருந்து நவம்பர் 10 வரை ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடை செய்துள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் அரசாங்கம் தடைசெய்தது இது நான்காவது முறையாகும்.

இதற்கு முன்னர், செப்டம்பர் 20-அக்டோபர் 3 மற்றும் ஆகஸ்ட் 18-ஆகஸ்ட் 31 மேலும் அக்டோபர் 17-அக்டோபர் 30 ஆகிய நாட்களில் டெல்லி-ஹாங்காங் விமானங்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தொற்றுநோய் காரணமாக மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் இந்த ஆண்டு ஜூலை முதல் இருதரப்பு விமான ஒப்பந்தங்களின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க இந்திய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங்கிற்கு செல்ல இரு விமானங்களுக்கு அக்டோபர் 30 வரை தடை.!

அக்டோபர் 17 முதல் 30 வரை ஏர் இந்தியா மற்றும் விஸ்டாரா விமானங்களில் ஹாங்காங்கிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

காரணம், விமானங்களில் சில பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ததை அடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து சர்வதேச பயணிகளும் ஹாங்காங் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங்கிற்கு செல்ல அரசாங்கம் தடைசெய்வது இது மூன்றாவது முறையாகும். முந்தைய தடைகள் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3 வரையிலும் இருந்தது.

இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஜூலை முதல் இருதரப்பு விமான ஒப்பந்தங்களின் படி சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க இந்திய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் தேர்தல் ஒத்திவைப்பு.. 300 பேர் கைது.!

ஹாங்காங்கின் சட்டமன்றத்திற்கான தேர்தல்களை ஒத்திவைப்பதாக அரசு அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

சட்டமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தன, ஆனால், ஜூலை 31 அன்று தேர்தல் தலைமை நிர்வாகி கேரி லாம் அவர்கள் நடத்திய கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் ஒத்திவைப்பதாக கூறினார்.

இந்த முடிவுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் 270 பேர் கைது செய்யப்பட்டனர். புதிதாக இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுபோன்ற கோஷங்கள் சட்டவிரோதமானது என்று போலீசார் தெரிவித்தனர்.

கவுலூனில் போராட்டக்கார்கள் மீது போலீசார் மிளகு பந்துகளை வீசியதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. கவுலூன் தீபகற்பத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். 300 பேரில் 169 ஆண்கள் மற்றும் 101 பெண்கள் ஆவார்.

மீதமுள்ளவர்கள் போலீஸ் அதிகாரிகளைத் தாக்கினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுபோன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாகவும்,  வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஹாங்காங்கில் பொதுக் கூட்டங்களில் தற்போது இரண்டு நபர்களுக்கு மட்டுமே அனுமத்திக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு! அமெரிக்கா கடும் கண்டனம்!

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா.

செப்டம்பர் 6-ம் தேதி, ஹாங்காங்கில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலானது, சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின் வரும்  முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது.

இந்த வார தொடக்கத்தில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அவர்கள், செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இது குறித்து எதிர்க்கட்சிகள், இது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த தேர்தல் ஒத்திவைப்பு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 6-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த சட்டசபை தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங் அரசின் முடிவை அமெரிக்க கண்டிக்கிறது என்றும்,  இவ்வளவு நீண்ட தாமதத்துக்கு சரியான காரணம் இல்லை. இதனால் ஹாங்காங்கில் இனி ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுமா ? மக்கள் வாக்களிக்க முடியுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ஹாங்காங் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டபடியோ அல்லது செப்டம்பர் 6ந் தேதிக்கு அருகிலேயோ தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் தனது சேவைகளை நிறுத்தும் டிக்டாக் நிறுவனம்.. இதுதான் காரணம்!

ஹாங்காங்கில் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில், சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டுவந்த நிலையில், அங்கு தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ள காரணம் மற்றும் சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதன் காரணமாக, இந்தியாவில் டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில், சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டுவந்தது.

இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு காரணமாக, டிக்டாக் நிறுவனம் ஹாங்காங் நாட்டில் தனது சேவையை நிறுத்தபோவதாக தெரிவித்துள்ளது. மேலும், டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழப்பு.!

  • கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது.
  • ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட  39 வயது நபர் ஒருவர் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறந்து உள்ளார்.

ஹாங்காங்கில் ஒருவர் பலி:

ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட  39 வயது நபர் ஒருவர் சிகிக்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை மருத்துவமனையில் இறந்து உள்ளார். இறந்த அந்த நபர் சீனாவின் வுஹானுக்கு பயணம் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த மரணம்  சீனாவை தவிர வெளியில் பலியான இரண்டாவது மரணமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸை சார்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங் தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் எல்லையாக உள்ளது.

கொரோனா:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.

இன்றைய பலி எண்ணிக்கை:

இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.நேற்று மட்டும் 64 பேர் இறந்து உள்ளனர்.

 

10 வருடம் பார்க்க ஆசைப்பட்ட வீரர்”நிறைவேற்றிய தோணி…நெகிழ்ந்த வீரர்…!!

ஆசியக் கோப்பைப் போட்டியில் ஹாங்காங் அணியை தனது முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, போட்டி முடிந்த பின் அவர்களின் அறைக்குச் சென்று சந்தித்து தங்களின் நட்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்த்து ஆடியது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது. ஆனால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் பேட் செய்த ஹாங்காங் அணி 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்து 26 ரன்களில் தோல்வி அடைந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் அன்சுமன் ராத், நிசாகத் கான் ஆகியோர் 170 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்குக் கிலி ஏற்படுத்தினார்கள். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஹாங்காங் அணி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டி முடிந்த பின், தங்களின் நட்பையும், பாராட்டையும் தெரிவிக்கும் வகையில், இந்திய அணியினர் ஹாங்காங் அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்குச் சென்று சந்தித்துப் பேசினார்கள். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தோனி, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவண், தினேஷ் கார்த்திக். குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சென்று ஹாங்காங் அணி வீரர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது ஹாங்காங் வீரர்கள் சிறப்பாக பேட் செய்ததற்கும், பந்து வீசியதற்கும் பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். தங்களின் அனுபவங்களை பாபர் கான், இஷான் கான், கின்சிட் ஷா ஆகியோரிடம் இந்திய வீரர்கள் பகிர்ந்து கொண்டு புகைப்படங்களையும் செல்ஃபிகளையும் எடுத்துக்கொண்டனர்.ஹாங்காங் அணி வீரர் இஷான் கான் ரோஹித் சர்மா விக்கெட்டையும், தோனி விக்கெட்டையும் வீழ்த்தியவர். சுழற்பந்துவீச்சாளரான இஷான் கான், ரோஹித் சர்மாவுடனும், தோனியுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இது தொடர்பாக இஷான் கான் கூறுகையில், ”தோனியைச் சந்திக்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்பது என்னுடைய 10 ஆண்டு கனவு.  அது இப்போது நிறைவேறிவிட்டது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இந்திய வீரர் புவனேஷ் குமார், பந்துகளை எவ்வாறு ஸ்விங் செய்ய வேண்டும் என்பது குறித்து ஹாங்காங் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவினார்.

DINASUVADU

Exit mobile version