Tag: honduras

அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம்..!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ஹோண்டுராஸில் உள்ள பினலேஜோ என்ற பகுதியிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

#Earthquake 2 Min Read
Default Image

ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி!

ஹோண்டுராஸ் நாட்டின் அதிபரான ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் உலகளவில் 84 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ், பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் தாக்குகிறது. குறிப்பாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

coronavirus 4 Min Read
Default Image