இந்தாண்டு மொத்த விற்பனை விவரத்தை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம். தனது புதிய பி.எஸ் 6 ரக மாடல்களின் வருகை குறித்த தகவல்கள் உங்களுக்காக. ஹோண்டா நிறுவன மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தற்போது இந்தியாவில் 2020 ஜனவரி மாதம் வரை தனது இருசக்கர வாகனங்களின் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் 3,74,091 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 29,292 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த ஜனவரி 2019 இல் ஹோண்டா நிறுவனம் 4,00,695 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. […]
ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் புகழ்பெற்ற சிபிஆர்650எஃப் பைக்கினை அந்நிறுவன இணையத்தளத்தில் இருந்து தற்போது நீக்கியுள்ளது. இது பல்வேறு கேள்விகளை ஹோண்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எழுப்பியுள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் டெல்லியில் கடந்த 2015ம் ஆண்டு 650 சிசி திறன் கொண்ட ஹோண்டா சிபிஆர்650எஃப் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது. இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த பைக் டெல்லி ஷோரூம் விலையில் 7.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது.இந்தியாவில் […]