கொரோனா தொற்றுக்கு ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோஹாமியோபதி மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உலக முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டறிவதில் ஆய்வாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதேபோல், பிளாஸ்மா சிகிச்சை, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு […]