மூன்றாண்டுகளில் ரூ.138 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல். கடந்த 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூ.137.96 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகளில் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தரவுகளில் தெரியவந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில், கைப்பற்றப்பட்ட ரூ.2,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகளின் முகமதிப்பு […]
பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகானுக்கு ‘Z’ வகை ஆயுதப் பாதுகாப்பை வழங்கிய டெல்லி அரசு. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து 9 மாதங்களுக்கும் மேலாக அப்பதவி காலியாக இருந்தது. இந்த சமயத்தில், நாட்டின் 2-வது முப்படை தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் கடந்த 28-ம் தேதி நியமிக்கப்பட்டதை அடுத்து […]
நுபுர் சர்மாவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் கண்டன போராட்டம் நடத்தும் நிலையில், எச்சரிக்கை. அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர் சர்மாவை கண்டித்தும், நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த […]