PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது. வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் […]
வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால், 2016 ஏப்ரலுக்கு முன்னர் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வங்கிகள் கடன்வட்டி விகிதத்தை தீர்மானிக்க பேஸ் ரேட் எனப்படும் அடிப்படை விகித முறையைப் பயன்படுத்தி வந்தன. இதன்படி ஒவ்வொரு வங்கியும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை தீர்மானிக்க தனித்தனி முறைகளை பயன்படுத்தி வந்தன. வங்கிகள் தன்னிச்சையாக வட்டி விகிதத்தை தீர்மானிப்பதால், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் அதைப் பின்பற்றி வட்டி விகிதத்தை குறைப்பதில்லை என […]
வருமான வரி சட்டத்தில் பிரிவு 24, 80C, 80EE ஆகியவற்றின் படி திரும்ப செலுத்துப்படும் வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப்படுகிறது. இந்த வரிச் சலுகை குடியிருப்பு சொத்து மீது மட்டுமே பெறக் கூடியது. இரண்டு பேர் இணைந்து சொத்து வாங்கும் பொழுது, இரண்டு பேருமே இணை உரிமையாளர் மற்றும் இணைந்து கடன் வாங்கியவர்களாக இருந்தால் மட்டுமே வரிச் சலுகை பெற முடியும். வீடு குடியேறிய […]