ஹோலி என்பது வடஇந்தியாவில் பிரபலமான பண்டிகையாகும், இப்பண்டிகை ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டுமின்றி ஜமைக்கா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிஜி, மலேசியா,சிங்கப்பூர், யுனைடெட் கிங்டம், யுனைடெட் ஸ்டேட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்தியாவை சேர்ந்த மக்களாலும் கொண்டாடப்படுகிறது. , ஹோலி பண்டிகை,ஹோலிக்கு முந்தைய நாள் இரவு ஹோலிகா தகனத்துடன் தொடங்குகின்றன,அடுத்த நாள் காலை அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்வர்.பிறகு ஹோலி உணவுகள்,உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.மாலையில், மக்கள் ஆடை அணிந்து நண்பர்கள் மற்றும் […]
நாட்டுக்கு தேவை இல்லாத இந்திய விவசாய சட்டம் என்று பொருள் கொள்ளுமாறு, வேளாண் சட்ட நகல்களை விவாசாயிகள் தீயிட்டு எரித்துள்ளனர். பல இடங்களில் கொரோனா பரவல் காரணமாக கோலி பண்டிகை சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று ‘ஹோலிகான் தஹான்’ என்ற பாரம்பரிய விழாவை கொண்டாடினர். இந்த விழாவில் வழக்கம் என்னவென்றால், ஹோலி பண்டிகையின் […]
உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லாத்மர் ஹோலி’ எனப்படும் வித்தியாசமான ஒரு பாரம்பரிய கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இந்த பண்டிகையானது வரும் மார்ச் 29-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் ஒரு வார காலத்துக்கு ‘லாத்மர் ஹோலி’ எனப்படும் வித்தியாசமான ஒரு பாரம்பரிய கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ‘லாத்மர் ஹோலி’ என்பது, கிருஷ்ணன் ராதா கதையை மையமாகக் […]
நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, உலக அழகியும் கூட. இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
ஹோலி பண்டிகை என்பது அரங்கபஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையை இந்து மதத்தினர் இளவேனிற்காலத்தை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை ஆகும். ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகை பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் போன்ற மாதங்களில் தான் கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் மக்களுக்கு அதிகமாக சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில், அன்று இப்பண்டிகையை மிகவும் வண்ணமயமாக […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க போவதில்லை என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme. — Narendra Modi (@narendramodi) March 4, 2020 அதில் […]
புனிதத் தலங்களான குருதுவாராவில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு சீக்கியர்களின் ஹோலா மொஹலா பண்டிகை கொண்டாடப்பட்டது. சீக்கியர்களின் பத்தாவது மதகுருவான குரு கோபிந்த் சிங், 18ம் நூற்றாண்டில் வண்ணங்கள் வீசும் ஹோலி நாளில்தான் , அவுரங்கசீப் உள்ளிட்டோரின் இஸ்லாமியர் படைகளை முறியடிக்க தனக்கான சீக்கியர்களின் ராணுவப் படையை அமைத்தார் என்று கூறப்படுகிறது. சீக்கியர்களின் புத்தாண்டும் இந்த நாளிலிருந்துதான் தொடங்குகிறது. இந்தப் புனித நாளை முன்னிட்டு வண்ண மயமான ஆடைகளுடன் ஏராளமான சீக்கியர்கள் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குத் திரண்டனர். […]
ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியில் தங்கள் வெள்ளையாடையின் மீது வண்ணங்களைப் பூசிக் கொள்ளத் துணிந்தனர். வண்ணங்களின் விழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய அவர்கள் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து தங்கள் வெள்ளைப் புடைவைகளை வண்ணமயமாக்கினர். ஆடல் பாடல் கொண்டாட்டம் என்று வடமாநிலங்களில் ஹோலிப் பண்டிகை களைகட்டத் தொடங்கி விட்டது. நாடு முழுவதும் நாளைய தினம் ஹோலி கொண்டாடப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.