ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி. தருமபுரி: ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அனுமதில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட […]
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வரை விநாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில்,அங்குள்ள அருவியில் குளிப்பதற்காக வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.அதன்படி,எண்ணெய் மசாஜ் செய்து ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் பலர் குளித்து மகிழ்ந்தனர்.மேலும்,சுற்றுலாப் பயணிகள் பலர் பரிசலில் பயணித்து காவிரி ஆற்றின் பல்வேறு பகுதிகளையும் கண்டு ரசித்தனர். குறிப்பாக,பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல் பகுதிக்கு வருகின்ற பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நீர் […]
ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை. ரூ.1,928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது போல, இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்படும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்தனர். ஆனால், கர்நாடக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தது. ஒகேனக்கல் கூட்டுக் […]
ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமைடைந்ததை தொடர்ந்து கர்நாடகா காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 20,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், 6,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு 23,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து வருவதால் 30,000 கன அடி நீர் […]
ஒகேனக்கலில் அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கில், தமிழக அரசு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்துள்ளது. மேலும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக […]
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஒரு வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி […]
தென்மேற்கு பருவக்காற்று மழையால் கர்நாடக மாநிலங்களில் பெய்து வந்த தொடர் மழையால் அங்கு உள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பியது. இதனால் காவிரி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் பரிசல் இயக்கவும் , சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்து இருப்பதால் 17 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் மீன் மார்க்கெட் மற்றும் கோத்திக்கல் வரை பரிசில் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா கர்நாடகவில் கடந்த வாரம் முதல் தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதானால் உபரி நீர் அதிகமாக வெளியேற்ற பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீர் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறதாம். இன்று காலை வினாடிக்கு 2.50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது, தற்போது இந்த […]