நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்.., தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

அரையிறுதிக்குள் தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக இந்திய மகளிர் அணி,மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. நாளை மறுநாள் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை அரை இறுதியில், இந்திய மகளிர் … Read more