ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD) சேர்மன் BR நாயுடு கூறியுள்ளார். சீனாவில் அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் 7 பேருக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஜன.19ஆம் தேதி வரை சிறப்பு டோக்கன் […]
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும் HMPV வைரஸ் தொற்று பற்றியும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அவர் பேரவையில் கூறுகையில், சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் HMPV எனும் வைரஸானது வீரியமிக்க வைரஸ் இல்லை. இதற்கான பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. இதற்கு ஒரே மருந்து, ஒரு 3 […]
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த HMPV தொற்று முதலில் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் சேத்துப்பட்டு மற்றும் கிண்டி தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பது உறுதியானது. இது சீனாவில் இருந்து பரவிய தொற்று அல்ல என்றும், இந்த […]
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பரவி வரும் HMPV தொற்று பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பரவி வரும் HMPV வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இந்த வைரஸ் […]
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் சென்னையில் சேத்துப்பட்டு பகுதி தனியார் மருத்துவமனையிலும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கண்ட இரு […]
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். அந்த வகையில், இன்று காலையில் முதலாவதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டது. பின்னர், ஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னையில் 2 குழந்தைகளுக்கும் இந்த புதிய HMPV […]
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை ராஜஸ்தானில் இருந்து சிகிச்சைக்கு வந்ததாக குஜராத் மாநில சுகாதாரத்துறை […]
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. முதலில் மற்ற நாடுகளில் இந்த தொற்று காணப்படவில்லை என்று கூறினாலும், இந்தியாவில் 3 HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருத்த அதே வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போதும் மாநில அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கர்நாடகாவில் 2 HMPV வைரஸ் தொற்றுகளும், குஜராத்தில் […]
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும் மறக்க இயலாது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் இருந்து தான் பரவியது. அதே போல தற்போது Influ A, HMPV வைரஸ்கள் அங்கு பரவுகின்றன. இதனை வெளி உலகத்திற்கு சீனா மறைக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை […]
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) உறுதி செய்துள்ளது. சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு […]