சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் இன்று . அவரைப் பற்றிய அரிய தகவல்கள். தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர் […]