உலக பத்திரிகை சுதந்திர நாள் தோற்றுவிக்கப்பட்ட நாள் இன்று. உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் […]
பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட தினம் மே 2-ஆம் தேதி ஆகும். ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் பிறந்தது மார்ச் 10, 1957-ஆம் ஆண்டு ஆகும்.பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார். இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். […]
மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாளை பெரும்பாலான நாடுகள் மே 1-ஆம் தேதி கொண்டாடுகின்றனர். ஐரோப்பாவில் இந்த நாளானது தொழிலாளர் நாள் இயக்கத்தை விடவும் மிகவும் முக்கியமானதாக, வல்லமையுடையதாக இருக்கும் கிராமப்புற திருவிழாவாக பழைய முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. இந்த விடுமுறை நாளானது சர்வதேசமயமாக்கப்பட்டு இருக்கின்றது மற்றும் பல நாடுகள் அணிவகுப்புகள், காட்சிகள் மற்றும் நாட்டுப்பற்று மற்றும் தொழிலாளர் சம்பந்தமான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலநாள் கொண்டாட்டங்களைக் கொண்டிருந்தன. இருப்பினும், வடக்கு ஐரோப்பாவில் வால்புர்கிஸ் இரவானது முன்னதான இரவில் […]
புரட்சிக்கவி பாரதிதாசன் பிறந்த தினம் இன்று ஆகும். புரட்சிக்கவி பாரதிதாசன் ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். […]
சதாம் உசேன் பிறந்த தினம் இன்று ஆகும். சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 7 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் […]
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்த தினம் இன்று. பிரபஞ்சன் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார் . இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி […]
சீனிவாச இராமானுஜன் மறைந்த தினம் இன்று . சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர்.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் […]
இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு தேசிய நாளாகும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் […]
இன்று (ஏப்ரல் 23)-உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினம் கொண்டாடப்படுகிறது. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் […]
பாரதிதாசன் மறைந்த தினம் இன்று ஆகும். பாரதிதாசன் ஏப்ரல் 29-ஆம் தேதி , 1891 ஆம் ஆண்டு புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். […]
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிறந்த தினம் இன்று . சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014 இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய […]
சார்லஸ் ராபர்ட் டார்வின் என்ற அறிஞர் மறைந்த தினம் இன்று. சார்லஸ் ராபர்ட் டார்வின் இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS […]
நோபல் பரிசு வென்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைந்த தினம் இன்று ஆகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான […]
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் ஆகும். தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் , தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை […]
பன்முகத் திறமை கொண்ட சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று . சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த […]
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த தினம் இன்று ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் […]
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று ஆகும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் – விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் […]
முன்னாள் மக்களவை தலைவர் சுமித்திரா மகஜன் பிறந்த தினம் இன்று. சுமித்திரா மகஜன் 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் 12- ஆம் தேதி பிறந்தார். பாஜகவின் சேர்ந்தவரும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார். 2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை […]
இந்தியாவில் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படுபவரின் மனைவியான கஸ்தூரிபா பிறந்த தினம் இன்று ஆகும். கஸ்தூரிபா மகாத்மா காந்தியின் மனைவி ஆவார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும் வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரி. […]