வரலாற்றில் இன்று(16.02.2020)… இந்திய திரைப்படத்துறையின் தந்தை மறைந்த தினம் இன்று…

இந்தியாவில் தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக என்று கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870ஆம் ஆண்டு  நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வர் எனும் ஊரில்  பிறந்தார்.  இவர், பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றுத்தேர்ந்தார். பின் 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.இது போன்ற … Read more

வரலாற்றில் இன்று(15.02.2020)… நோக்கு வானியலின் தந்தை பிறந்த தினம் இன்று…

இத்தாலிய நாட்டின், இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் என பண்முகத்தன்மை கொண்டவர் கலீலியோ கலிலி ஆவார். இவர், இத்தாலி  நாட்டின் பைசா நகரில் பிப்ரவர் மாதம் 15ஆம் நாள் 1564 அன்று பிறந்தார்.இவர் பைசா மற்றும் படுவா ஆகிய பல்கலைகழகங்களில் கல்வியை கற்றார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிகவும்  முக்கியமான பங்காற்றியுள்ளார். கலீலியோ  கலிலி “நோக்கு வானியலின் தந்தை” என்றும் “நவீன இயற்பியலின் தந்தை”, என்றும்,  “நவீன அறிவியலின் தந்தை” … Read more

வரலாற்றில் இன்று(13.02.2020)… ஏழைகளின் சொத்தான ரேடியோவின் உலக வானொலி நாள் இன்று…

ரேடியோ என்ற சொல்லானது ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியிலிருந்து  பிறந்தது. இந்த வானொலியை மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி  கண்டு பிடித்தார். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை  என அழைக்கப்படுகிறார்.  இவர், கம்பியில்லா  தகவல்தொடர்பு முறை  மற்றும் ´மார்க்கோனி விதி  ஆகியவற்றை உருவாக்கினர். இகந்த கண்டுபிடிப்பிற்காக 1909ஆம் ஆண்டு  இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் மார்கோனியுடன் இணைந்து பெற்றார். உலகில், தகவல்களை  மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு … Read more

வரலாற்றில் இன்று(12.02.2020)… தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யூ.போப் மறைந்த தினம் இன்று…

அமெரிக்க கண்டத்தின் கனடாவில்  பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820 ஆம் ஆண்டு ஏப்ரல்மதம் 24ம் நாள் பிறந்தவர். இவரது  தந்தை ஒரு வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் நங்கு பயின்ற பிறகு,தனது  சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். இவர் தமிழகம் வர கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.பின் இவர்,, தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயராகியோரிடம்  தமிழ் இலக்கண, … Read more

வரலாற்றில் இன்று(11.02.2020)… உலகை இருளிலும் ஒளிரச்செய்த உத்தமரின் பிறந்த தினம் இன்று…

பிறப்பு மற்றும் இளமை: தாமஸ் ஆல்வ எடிசன் பிப்ரவரிமாதம்  11ஆம் நாள்  1847ஆம் ஆண்டு  ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பெற்றோர்கள் நடுத்தர வகுப்பை சார்ந்தவர்கள். இவரது தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர், இவரது  தாயார் நான்சி எடிசன் இவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் … Read more

வரலாற்றில் இன்று(10.02.2020)…ஜம்மு காஷ்மீரின் பிரதமராக இருந்த தமிழர் மறைந்த தினம் இன்று…

ஜம்மு காஷ்மீர் சுதேசத்தின்  பிரதம அமைச்சராக இருந்து இந்திய அமைச்சராக உயர்ந்த ஒரு தமிழரின் வரலாறு இன்று உங்களுக்காக.. கோபாலசாமி அய்யங்கார்,தமிழ்நாட்டில் தஞ்சாவூரில்  மார்ச் மாதம் 31ம் நாள் பிறந்தார்.  பள்ளிக் கல்வி மற்றும்  கல்லூரிக் கல்வியில்  சட்டக் கல்வியையும்  சென்னையில் முடித்தார். பின் சிறிது காலம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப்பேரராசிரியராக பணிபுரிந்தார். பின்னர்இந்தியாவில்  562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினரகளில், ந. கோபாலசாமி அய்யங்காரும் … Read more

வரலாற்றில் இன்று(09.02.2020)… இந்திய இயற்பியில் அறிஞர் பிறந்த தினம் இன்று…

இந்திய இயற்பியலாளர் திரு. பஞ்சரத்தினம் அவர்கள், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார். இவர், தனது கல்வியை சிறப்பாக கற்றுக்கொண்டு,  தனது, 25ஆவது வயதில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். மேலும், இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில்  இயற்பியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர், தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்து, ஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை, 1955 ஆம் ஆண்டு கண்டறிந்தார். எனினும்,  … Read more

வரலாற்றில் இன்று(08.02.2020)… இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவர் பிறந்த தினம் இன்று,,..

இந்திய கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும், ஜனநாயக இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவருமான ஜாஹீர் உசேன் பிறந்த தினம் இன்று. இவர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் 1897ஆம் ஆண்டு  பிப்ரவரி 8 ஆம் நாள்  பிறந்தார். இவர், உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா எனும்  ஊரில் தனது உயர்நிலைக் கல்வியை  முடித்தார். இதன் பின் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டம். பின்  ஜெர்மனியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில்  மேற்படிப்பு பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் … Read more

வரலாற்றில் இன்று(07.02.2020)…மொழி ஞாயிறு தேவநேய பாவணார் பிறந்த தினம் இன்று…

தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தமிழறிஞர் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த நாளில் இவரது அரும்பணியை நினைவு கூறுவோம். பிறப்பு: தேவநேய பாவாணர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஞானமுத்து-பரிபூரணம் அம்மையார்  தம்பதியருக்கு   திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். கல்வி: தன்  ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி லூத்தரன் விடையூழிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார். பின், பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் … Read more

வரலாற்றில் இன்று(05.02.2020)… மூத்த தமிழ் அரசியல்வாதி பிறந்த தினம் இன்று…

பல்வேறு அரசியல் பதவிகளில் இருந்த இலங்கை தமிழ் அரசியல்வாதி பிறந்த தினம் இன்று. இந்நாளில் இவரை நினைவு கூறுவோம். இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் என பல்வேறு பொறுப்புகளை வகித்த இரா. சம்பந்தன் அவர்கள் பிப்ரவரி 5, 1933ம் ஆண்டு பிறந்தார். இவர், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர்.  இதனால், சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் … Read more