கேரளா : ஒருவர் எந்த மதத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை. அப்படி ஒருவர் மாற்று மதத்திற்கு மாறிவிட்டால் அந்த நபருக்கான ஆவணங்களில் தேவையான மாற்றங்களை அரசு அதிகாரிகள் செய்து தரவேண்டும் என கூறி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள், இந்து மதத்தை சேர்ந்த பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள். பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த அவர்கள் பின்னர் கடந்த 2017, மே மாதம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அதனால், தங்களுக்கு பள்ளி சான்றிதழ்களிலும் மதத்தை மாற்றி […]
புதிய கோவில்களை துறை கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டது. அதில், விதிகளை மீறி செயல்படும் திருக்கோவில் உதவி ஆணையர் மற்றும் தலைமை எழுத்தர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு தமிழில் தான் முறைப்படி நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிளும், பல தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை என்றால், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஆனது 23 வருடங்களுக்கு பிறகு பிப் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், […]