இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர், ஏல்வார்குழலி சிலைகள் சேதமடைந்ததால், அதற்கு பதிலாக புதிய சிலை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக அண்ணாமலை என்பவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சிலை […]