காரைக்காலில் ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தில் கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு, தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். காரைக்காலில் உள்ள கீழகாசாகுடி பகுதியில் ஒத்தை பனைமர முனீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலை சுற்றியுள்ள விளை நிலங்களை 35 ஆண்டுகளுக்கு முன்னரே அப்துல்காதர் என்கிற இஸ்லாமியர் விலைக்கு வாங்கிவிட்டார். அந்த சமயத்தில் முனீஸ்வரர் கோவில் சிறிய அளவில் இருந்துள்ளது. அங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று வந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் வீடுகள் அதிகமானதால், முனீஸ்வரர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் […]