திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் பாலதண்டாயுதபாணி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. அந்த பலகையானது அங்குள்ள அதிகாரிகளால் முன்பு அகற்றப்பட்டது. இதனை அடுத்து பழனியை சேர்ந்த ஒரு நபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்து அறநிலைத்துறை சட்டத்தின் படி, ‘இந்து அல்லாதவர்கள் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , வேறு மத கடவுளை வணங்குவோர்கள் கோவிலுக்குள் வருவதற்கு தடை […]
சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனைக்கு நடத்த வேண்டு என்ற கோரிக்கை நிராகரிப்பு. உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்பின், ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக […]
1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக […]
இஸ்லாமிய சகோதரர் செய்த நெகிழ்ச்சியான செயல். இன்று சாதி, மதம், இனம் என வேற்றுமையோடு பழகுபவர்கள் பலர் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் கலைந்து , ஒற்றுமையுடன் வாழும் சிலரும் இந்த இந்தியாவில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிராவின் அஹமதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் இஸ்லாமியர் ஒருவர், பல வருடங்களுக்கு முன் இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரிகளை அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்து வளர்த்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு அனைத்து செலவுகளையும் ஏற்று இந்து […]
நான் முஸ்லிம், என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள் நடிகர் ஷாரூக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ப்ளஸ் 5 என்ற நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷாருக் வருகை தந்துள்ளார். அப்போது அவர் எங்கள் வீட்டில் எப்போதுமே இந்து – முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை.காரணம் எனது மனைவி இந்து, நான் முஸ்லிம், எனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறியவர் ஒருமுறை எனது […]
கேரளாவில் பிந்து என்ற பெண்ணுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். அவரது பெண்ணுக்கு வரும் 19-ம் தேதி திருமணம் அங்குள்ள ஒரு மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி நடைபெற உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தின் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி ஒன்றுள்ளது. இதன் அருகில் ஒரு வாடகை வீட்டில் உள்ள பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். […]
பாகிஸ்தானிலும் சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்ட ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிந்து மாகாணத்தில் தான் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு இந்து பெண்மணி காவல்துறை உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். பாகிஸ்தான் காவல்துறையில் முதல் ஹிந்து பெண் அதிகாரி ஆக இவர் திகழ்ந்துள்ளார். பாகிஸ்தான், சிந்து மாகாணத்தை சேர்ந்த புஷ்பா கோலி என்பவர், காவலர் போட்டித்த தேர்வு எழுதி அதில் வெற்றி கண்டு தற்போது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு […]
தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கிராம தேவதை மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 1008 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசங்களை வைத்து சலசாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை-அலங்காநல்லூர் அருகே உள்ள சிக்கந்தர்சாவடி, சதங்கை கலை மையம் அருகிலுள்ள சர்ச் மற்றும் கூடல்புதூர் பகுதியிலுள்ள இரண்டு சர்ச் களுக்கு ஞாயிறன்று ஐம்பது பேர் கொண்ட இந்துத்துவ வெறிக்கும்பல் ஒன்று சென்றுள்ளது. இனிமேல் நீங்கள் யாரும்சர்ச் நடத்தக்கூடாது. அடுத்த வாரம் சர்ச் நடத்தினால் உங்களை எல்லாம் இங்கிருந்து விரட்டியடிப்போம் என அந்தக்கும்பலில் இருந்தவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சிக்கந்தர்சாவடி மந்தையம்மன் கோவில் தெரு பகுதியில் சர்ச் நடத்தி வரும் ரவிஜேக்கப் என்பவர் கூறுகையில், ஞாயிறு […]
பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம். ஆனால் படத்தில் இந்து அமைப்புகள் சொன்ன கருத்து எதுவும் இல்லை. ராஜபுத்திரர்களை உயர்வாகவும், வீரமாகவும் தான் காட்டியுள்ளனர். பத்மாவதி கதாபாத்திரம் இறுதிவரை கண்ணியமாக இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரமாக ரன்வீர்சிங் சிறப்பாக நடித்திருக்கிறார். பதவி வெறி, காம வெறி, எதையும் வெற்றி கொள்ள எதையும் செய்பவர். மிகவும் மோசமான மன்னன். ஒரு காட்சியில் பத்மாவதி கூறுவாள், அலாவுதீன் கில்ஜி அரசனல்ல, அரக்கன் என்பாள். பத்மாவதியாக தீபிகா படுகோன் நேர்த்தியாக […]