திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பது போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது என தமிழகத்தில் திமுக, அதிமுக , விசிக, காங்கிரஸ், நாதக, தவெக என அனைத்து கட்சியினருமே எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். அன்பில் […]
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதி தர முடியவில்லை என்பது போல பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தவிர்த்து திமுக, அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக என பல்வேறு கட்சியினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். திமுக சார்பில் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி […]
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அஷ்வின், முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். […]
சென்னை : தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை இன்னும் ஏற்கவில்லை. பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இன்னும் தமிழக அரசு சேரவில்லை. அதனால், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய உட்கட்டமைப்பு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் களத்தில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காதது குறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக அரசு மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் […]
கோவையில் 1- ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என குறிப்பிட்டிருந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது. இதன்காரணமாக, கடந்து சில […]