சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற் போலவே மத்திய அரசின் சில செயல்பாடுகளும் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு நிகழ்வை சுட்டிக்காட்டி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது கண்டன பதிவை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் குறிப்பிட்ட பதிவில் கேரள மாநில கல்வியமைச்சர் வி.சிவன்குட்டி இந்தி திணிப்பு பற்றிய கூறிய கண்டனம் பற்றிய செய்தித்தாளை […]
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையாததால் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என்றும் , பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் மும்மொழி கொள்கை கோட்பாடை மத்திய அரசு அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தி மொழியை திணிக்க முற்படுகிறது என திமுக மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் மத்திய அரசின் இந்த போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
சென்னை : நேற்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தி திணிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தேன் கூட்டில் கல் எறிவது ஆபத்து. ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோடைகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய 4 […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். மத்திய அரசு மும்மொழி கொள்கை வாயிலாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது என்ற குற்றசாட்டு திமுக மட்டுமல்லாது தமிழகத்தில் பரவலாக கூறப்படும் குற்றசாட்டு. இதனை பாஜக மறுத்தாலும், தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழி படிக்க வைப்பதில் இந்தி மொழியை தவிர வேறு மொழிகளை படிக்க வைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த மும்மொழி […]
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட பிறந்தநாள் நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அதனை அடுத்து இன்று காலை முதல் கலைஞர் நினைவிடம், அறிஞர் அண்ணா நினைவிடம் , பெரியார் திடலில் மரியாதை செலுத்தினார். சென்னை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடக்கி வைத்தார். அதன் […]
டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலை கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக ஏற்று கற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறித்து, இன்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 130 கோடி மக்களும் தமிழை காப்பாற்ற வேண்டியது கடமை என […]
இந்தி தெரிந்தால் பெண்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பாஜக நிர்வாகியும், கார் & பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியை கட்டாயமாக்குவது குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுமக்களும்,சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்,இந்தி தெரிந்துக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்து வித்தியாசமான கருத்து ஒன்றை பாஜக நிர்வாகி அதிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார். ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் பெண்கள் இரவில் பயணிக்கும் போது,யாராவது வந்து தொல்லை செய்தால் இந்தி […]