அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு ரயில் விபத்து ஏற்பட்டது ஏன செய்திகள் வெளிவந்தாலும் நம் மனதைப் பதற வைத்து வருகிறது. அந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து சில இடங்களில் அவ்வப்போது, ரயில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாமில் இன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அசாமில் அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் தடம்புரண்டு விபத்து […]
அசாம் : அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக, 2 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார். சத் பூஜை (நவம்பர் 7) விடுமுறை நாளை தொடர்ந்து, நவம்பர் 6, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு “வயதான பெற்றோர் அல்லது மாமியார்களுடன் நேரத்தை செலவிடுவதற்கும் அவர்களை கௌரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும், […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ம்தேதி மணிப்பூரில் இருந்து யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று அசாம் வந்தடைந்தார். அசாமில் நுழைந்தது முதல்அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அசாம் மாநிலத்தில் யாத்திரைக்கு தலைமை தாங்கி வரும் ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக நடந்த […]
காசிரங்கா பூங்காவிற்கு இரவு நேரத்தில் பயணம் செய்த விவகாரத்தில் எந்த விதி மீறலும் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விளக்கமளித்துள்ளார். அசாமில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம், காசிரங்கா வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அண்மையில் திறந்து வைத்தார். அப்போது, இரவு, சத்குரு ஜக்கி வாசுதேவ் , முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆகியோர் ஒரே காரில் இரவு பூங்காவிற்குள் […]
இந்தியாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து அல்-கொய்தா தலைவர் அய்மன் முகமது ரபி அல்-ஜவாஹிரி கணடனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அல்-கொய்தா ஒருபோதும் புரிந்து கொள்ளாது, ஆனால் இந்திய முஸ்லிம்கள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார். அல்-கொய்தா தலைவர், செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இஸ்லாம் மீதான தாக்குதலை “அறிவுபூர்வமாக, ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றும் போர்க்களத்தில் ஆயுதங்களைக் கொண்டு” போராடுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திருந்தார். அனைத்து […]
அஸ்ஸாமின் அடுத்த முதலமைச்சராக ஹிமாந்த பிஸ்வா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் 126 தொகுதிகளைகொண்ட அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதில், பாஜக 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றது. பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வந்தது. முதல்வர் போட்டியாளர்களாக முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹிமந்தா […]