இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தின் தேர்தலின் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம். இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதுபோன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 182 தொகுதிகளையு கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி […]
பாஜக குதிரை பேரத்தை தடுக்க வெற்றி முகத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை சண்டிகாருக்கு அழைத்து செல்ல கட்சி தலைமை திட்டம். இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை விட காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு தேசிய கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இதனால் இமாச்சலில் மீண்டும் பாஜகத்தான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இமாச்சல பிரதேச தேர்தலில் […]
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றி என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக 182 தொகுதிகளில் 152 தொகுதிகளில் முன்னிலை பெற்று அமோக வெற்றியை பதிவு செய்ய உள்ளது. இந்த மாபெரும் முன்னிலையால் குஜராத் பாஜகவின் கோட்டையாகவே மாறியது. ஆனால், காங்கிரஸ் வெறும் 21 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மேலும், குஜராத் அரசியல் களத்தில் புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி 6 இடங்களில் […]
குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை. குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில், குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் கட்லோடியா மற்றும் செராஜ் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் படேல் 23,713 […]
இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி. இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருப்பதால், இந்தமுறை மாற்றம் நிகழும் என தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆட்சி மாறும் வரலாறும் உண்டு எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனவும் […]