சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009_ஆம் ஆண்டு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இதில் தொடர்புள்ள 31 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்ட வழக்கில் நீதிமன்ற முன்னாள் உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருப்பன் உள்ளிட்ட 32 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில் கருப்பன் இறந்துவிட்டதால் மீதமுள்ளவர்கள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் […]
டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, டெங்கு பன்றிக்காய்ச்சலுக்கு தற்போது வரை எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியதோடு, டெங்கு, பன்றிக்காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை […]
தமிழக கோவில்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஆபாச நடனம் , பாடல் காட்சி இடம்பெற்று நடத்தினால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்குகளை விசாரித்த நீதிபதி கோவில் திருவிழாக்கள் அல்ல விழா நிகழ்ச்சிகளில் கலாசாரம் என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் , பாடல்கள் இடம்பெற்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற தமிழக DGP அலுவலகத்திற்க்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் கோவில்களில் […]
சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ விற்பனை கடைகளின் வர்த்தகத்தில் அரசு அதிகாரிகள் தலையிட தடை விதிக்க வேண்டும் என முருகன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, 22 ஆண்டுகளுக்கு முன்பே கடைகளை காலி செய்ய அரசு உத்தரவிட்டும், சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பூக்கடைகளின் உரிமையாளர்கள் அரசு வைத்த சீலை உடைத்து மீண்டும் வர்த்தகம் […]
ஹெச்.ராஜா மீது திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புகார் தெரிவிக்க இருக்கிறார்கள். ஹெச்.ராஜா, பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். ஹெச்.ராஜா, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியானது. ஆனால் இன்று (செப்டம்பர் 16) அது குறித்து விளக்கம் அளித்த ஹெச்.ராஜா, ‘எனது பேச்சை […]