எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் சத்து உணவிற்காக மாதம் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள்.இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள்தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற […]
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்கக்கூடாது என்று தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி, எண்ணெய்யை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக்கூடாது என்பதை மேற்கோள்காட்டி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அதிரடி உத்தரவை பிறப்பிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய்கள் தயாரிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமையல் எண்ணெய்யின் தரத்தை ஆய்வு செய்வதற்கான […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவதற்கும் இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது. இ பாஸ் கட்டாயம் என்பதால் கடந்த சில மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இ-பாஸ் அரசாணையை […]