காவிரி ஆற்றில் தடுப்பணை என்னவாயிற்று.? பொதுப்பணித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவேரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டம் குறித்த முழு விவரத்தையும் தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும். – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. காவிரி ஆற்று நீர் பெருபாலான நீர் கடலில் கலந்து விடுவதால், காவிரி ஆற்றுநீரை சேமிக்க கரூர் புஞ்சை புகளூரில் தடுப்பணை கட்டபட வேண்டும் என அதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை இன்று விசாரித்த நீதிபதி அமர்வு ,’காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக … Read more

#Breaking:இதனை மீறும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு!

காவல்நிலையங்களில் சிசிடிவி காட்சி பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகள்: மேலும்,கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகளின்மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழக காவல்துறைக்கும்,உள்துறை செயலாளருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு: பல முக்கிய குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் சாட்சியாக உள்ள நிலையில்,அவை வேலை செய்யவில்லை என்ற பதிலே … Read more

#Breaking:இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு!

இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை அடிப்பதும், அதனை பயன்படுத்துவதும்,வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.அலுவலக நேரத்தில் செல்போன் பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு உரியவிதிகளை வகுக்க … Read more

இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை:பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. பேரரசர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையில்,இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், “கடந்த 2019 ஆம் ஆண்டு நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக பொதுக்கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று குறித்து உண்மைகள் சிலவற்றை … Read more

பயிர்க்கடன் தள்ளுபடி:உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பு ரத்து- உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி:விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முந்தைய அரசு அரசாணை வெளியிட்டது.இதனை எதிர்த்து, விவசாயிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.ஆனால்,இந்த உத்தரவை … Read more

“ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகன பாதுகாப்புகளை,குரூப்-4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்?” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி!

மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி … Read more

இறைவனை வணங்க செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம்- மதுரைக்கிளை..!

திருச்சி திருவானைக்கோவில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து  திருவிழாவை நடத்த உத்தரவிடக்கோரி பத்மநாபன் என்பவர்  மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல, இறைவனை வணங்க செல்பவர்கள் மனிதாபிமானத்துடன் இருப்பதுதான் முக்கியம். எந்தவித ஏற்றத்தாழ்வு, பாகுபாடும் கடவுள் பார்ப்பதில்லை. மனிதர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதை கடவுள் … Read more

#BREAKING: தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு கைதானவர்களை அழைத்துச் செல்வது கடினம் என்பதால், சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி … Read more

காவல்துறை தாக்குவது கொரோனா போன்ற ஒரு தொற்று நோய்.! உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிகிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த  சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் அடுத்ததடுத்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,  காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், உயர்நீதிமன்ற விசாரணையை பொதுமக்கள் குறைத்து நினைக்க  வேண்டாம், இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும், கொரோனா காலத்தில் … Read more

கொரோனா ஊரடங்கு! 2 மாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற மதுரை கிளை திறப்பு!

2 மாதத்திற்கு பின் உயர்நீதிமன்ற மதுரை கிளை திறக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், மதுரை உயர்நீதிமன்ற கிளை மூடப்பட்டிருந்த நிலையில், 2 மாதங்களுக்கு பின் தற்போது திறக்கப்ட்டுள்ளது. மேலும், அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உயர்நீதிமன்ற கிளையில் … Read more