பாத வெடிப்புக்கு எளிய நாட்டு மருந்து இதோ..!
பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற பாதங்களால் படுகிற இம்சை சொல்லிமாளாது. தே. எண்ணெய் 1 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பசுநெய் 4 துளி, மஞ்சள்தூள் 2 சிட்டிகை. இவற்றுடன் 1 டீஸ்பூன் பயத்தம் மாவைச் கலந்து கொள்ளுங்கள். தினமும் தூங்கப்போகும் போது வெடிப்பு இருக்கும் பகுதியில் ஐந்து நிமிடங்கள் தடவியபடி இருந்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். விரைவிலேயே வெடிப்பு, கருமை நீங்கி பாதம் மெத்தென்று ஆகிவிடும்