அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த லட்சக்கணக்கான பக்தர்களின் திரளால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், பாஜக எம்.பி. ஹேம மாலினி கும்பமேளா கூட்ட நெரிசலில் நடந்த உயிரிழப்புகளை குறித்தும், இது அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா தொகுதியின் பாஜக எம்.பியும் ,நடிகையுமான ஹேமமாலினி நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் கூறும்போது ,என் தொகுதியான மதுராவிற்கு வரும் பக்தர்களின் பொருட்களை குரங்குகள் பறித்து தொல்லை தருகிறது. எனவே குரங்குகளுக்கான வனப்பகுதியை அரசு உருவாக்க வேண்டும். இது போன்று உணவுப்பழக்கத்தால் குரங்குகளுக்கு ஒருவித நோய் பரவுகிறது. பழங்களுக்கு பதிலாக மனிதர்களிடம் இருந்து சமோசா மற்றும் ஜுஸ் போன்றவற்றை பறித்து குரங்குகள் சாப்பிடுகிறது என கூறினார். இதை தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் டெல்லியிலும் குரங்குகள் […]