சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகமெங்கும் அநேக மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அதன்படி சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, மெரினா, ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு, ஐயப்பன்தாங்கல், வானகரம், […]
கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதித்துள்ளது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் அடங்கிய கொய்யாப்பழத்தில் பாதுகாக்க எவ்வளவு மருந்து அடித்தாலும் பலன் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற […]