சவுதி அரேபியா : மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை (125 பாரன்ஹீட்) எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கடும் வெப்பத்தை […]
டெல்லி : வட இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில், நேற்றைய தினம், 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (மே 30ஆம் தேதி) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், லேசான முதல் மீதமான மழையுடன், இடியுடன் கூடிய காற்று (மணிக்கு 25-35 கிமீ வேகம்) வீச வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. […]
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்ப அலை பதியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதில், அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலத்தில் 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், […]
கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த ஆண்டு பல இடங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இந்த அக்கினி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல இடங்களில் மழை பெய்த காரணத்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து […]
வெயில் காலத்தில் ஆல்கஹால் பெரிய அளவில் உடல்நலனை பாதிக்கும். அதை அருந்துபவர்கள் கொஞ்ச காலத்திற்கு தியாகம் செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இல்லை. வெளியே வந்தாலே தண்ணீர் […]
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி நட்சத்திரம்: இந்நிலையில்,இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் […]
தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக வேலூரில் 105, திருத்தணி, திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும், மதுரை விமான நிலையம் 103, ஈரோடு, கரூர், பரமத்தி, தஞ்சை, மதுரையில் தலா 102 டிகிரி, சேலம் 101, பாளையங்கோட்டை 100 டிகிரி […]
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,நாளை முதல் மே 28ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது.ஏற்கனவே பல மாவட்டங்களில் 108 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கும் […]
இன்று தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதன்படி, கரூர் பரமத்தி – 104, ஈரோடு – 102, சேலம் – 101 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தருமபுரி, மதுரை விமான நிலையம், திருச்சி ஆகிய இடங்களிலும் 100 டிகிரி ஃபாரான்ஹீட் […]
ஒரு குறிபிட்ட வயது அடைந்தஉடன் முகத்தில் பருக்கள் வர ஆரம்பமாகின்றன.அவ்வாறு பருக்கள் வருவதற்கு ஒவொருவரும் பல காரணங்களை கூறுவார்கள். அதனை வராமல் பார்த்துகொள்வது எப்படி என்பதை பார்போம். ஒரு நாளைக்கு 2 முறை நல்ல கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம். உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பும் அதிகரித்து, சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, பருக்களை அதிகம் வரவழைக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் […]
கோடை காலங்களில் பல நபர்களின் உடம்பில் இருந்து வரும் வியர்வை அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால் அவரின் அருகில் செல்லவே தயங்குவார்கள்.இதனை இயற்கை முறையில் சரி செய்யலாம். 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தினமும் குளிக்கும் முன் ஒரு துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி […]
கோடை காலம் பிறந்து விட்டாலே கொளுத்தும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும் அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் வியர்க்குரு வரும். குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். வியர்குருவில் பூஞ்சை […]