சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்கும் முறை மீண்டும் தொடக்கம். சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவல் உருவெடுக்க தொடங்கி உள்ளன. இதில் நாட்டில் கணிக்கப்பட்ட மூன்றாவது அலைகளில் சீனா தற்போது முதல் இடத்தில் உள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்திருந்தார். தற்போதைய மூன்றாவது அலை இந்த குளிர்காலத்தில் உச்சத்தை எட்டும் என்றும் எச்சரித்து உள்ளார். கொரோனா […]
சில்லறை சிகரெட் விற்பனையை விரைவில் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் நிலைக்குழு பரிந்துரைத்ததை அடுத்து, சில்லறை சிகரெட் ( loose cigarettes) விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு பரிந்துரைகளின்படி, ஒற்றை சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி அரசாங்கம் இ-சிகரெட்டுகளை தடை செய்தது. இந்த நிலையில், இந்தியாவில் சில்லறை அல்லது […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11,651 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு நாளில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 6,396 ஆக இருந்த நிலையில், இன்று 5,921 ஆக குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா […]
இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951 ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 4,21,382 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,06,21,469 ஆக இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது என்றும் நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே […]
தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கான இறுதி அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் வழங்கிய இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் மேலும் ஏழு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. 12 மாநிலங்கள் ஏற்கனவே தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன. இவற்றுடன், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தடுப்பூசி வழங்கத் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் […]
“நிவர்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத் துறையால் தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் 465 அவசரகால ஊர்திகள் உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத் துறையால் தமிழ்நாடு முழுவதும் 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் ஆகியன பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது.மேலும், கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், […]