தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலம் உருக்காலை வளாகத்தில் மேலும் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: “தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, நோய் […]