உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். பின்னர் அதற்கான சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து பேசிய அவர், உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து மருத்துவர்கள் தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.