மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் மீது உடனடிக் கடன் வழங்கப்படும் என HDFC வங்கி அறிவித்துள்ளது. தனிநபர் கடன் வழங்குவதில் முதலிடத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கி, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்னும் நிறுவனத்துடன் ஓர் உடன்பாடு செய்துள்ளது. இதன்மூலம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை அடமானமாகப் பெற்றுக்கொண்டு உடனடிக் கடன் வழங்க எச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் 50விழுக்காடு வரை கடன் வழங்கப்படும். இந்தக் கடனுக்கான வட்டி வீதம் 11விழுக்காடு வரை இருக்கும். […]