கோவில்பட்டி சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும், இன்று […]