உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதற்கு சினிமா துறையை தாண்டி அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு, “வீரசேகரன் சேனாபதி என்கிற கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் லைக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. Celebrating the legend #Ulaganayagan on his birthday! […]
1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான உலக நாயகன் கமல்ஹாசன், 63 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மாபெரும் சாதனை படைத்தது வருகிறது. அவர் ஒரு நடிகர் மட்டும் சொல்லிட முடியாத, தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமையுள்ள கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிய கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் […]